இரண்டு வாரங்களாக நான் இந்த அரண்மனையில் இருந்தேன். ஒன்றும்
நிகழவில்லை
பிஜான் இலாஹி
இந்தக் கவிதை அரேபிய ஆயிரத்தொரு இரவுகளான “The House and the
Belvedere” (night 599) கதையை ஒரு கவித்துவ மறுகூறலாக வழங்குகிறது. ʻAbd al-Laṭif
Tasuji Tabrizi (1858) அவர்களின் பெர்ஸிய மொழிபெயர்ப்பான ஆயிரத்தொரு இரவுகளின் சொற்றொடராக்கத்தை
இலாஹியின் கவிதை மறு உருவாக்கம் செய்கிறது.
பாக்தாத்தின் அலங்கார வளைவுகளும்
டிக்ரிஸின் அலங்கார வளைவுகளும்-
முடிவுறாமல் உள்ள கதை
ஒரு கவிதையாக மாறலாம், முடிவுற்ற
ஒரு கவிதை ஒரு கதையை உருவாக்கக்கூடும். அதனால்தான்
கவிஞர்கள் தமது கவிதை வரிகளை எப்பொழுதும்
உடைக்கின்றனர்.
பாக்தாத்தைச் சுற்றிலும் இலக்கற்ற நடைகளிலிருந்து
ஆயிரத்தொரு இரவுகளின் பல பளிங்குக் கற்கள்
பொருத்தப்பட்ட
அங்காடித் தெருவில் உள்ள வீட்டின் மீதுள்ள
வரியை உடைக்க
விரும்பினேன். அங்குதான் கூரைகள் மீது
நீலவண்ண ரத்தினக் கற்களும் பொன்னும்
தீட்டப்பட்டுள்ளன.
”பத்து தினார்கள் மாத வாடகை!”
”விளையாடுகிறீர்களா?” அங்காடிக்காரர்
கூறுகிறார்.
“நான் விளையாடவில்லை, ஆனால் அந்த வீட்டினுள்
நுழைபவர்
நோய்வாய்ப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள்
இறந்து விடுவார்.”
இரண்டு வாரங்களாக
நான் இந்த அரண்மனையில் இருந்தேன், ஒன்றும்
நிகழவில்லை.
பொன்நிற சூரியாஸ்தமனங்களை மட்டும் கண்டேன்:
நீங்கள் அந்த முனகல்களைக் கேட்கலாம்!
”அடேய், பையா, பெல்வெதர் அரண்மனையை நீ
பார்த்ததில்லையா?”
அங்காடிக்காரரின் மனைவி கூறினார்.
ஆனால் கூரையில் என்ன உள்ளதென்றால்
பாக்தாத்தின் அலங்கார வளைவுகளும் அல்ல,
டிக்ரிஸின் அலங்கார வளைவுகளும் அல்ல
மற்றவை-
.
தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
No comments:
Post a Comment