சிறுத்தையின் பிரார்த்தனை
ரோஜர் ரீவ்ஸ்
கடவுளே,
என்னை உபயோகமுள்ளவனாக்கு, இல்லை வேண்டாம்
அந்தப்
பச்சைச் சிறுத்தை கோபத்தில் தைக்கப்பட்டுள்ளது
சில
இரவுப் பார்வைக் கோணத்தின் இழைகள்
முழுமைக்குள்
என்னை உறைய வைத்ததாய்ச் சொல்கின்றன
இரக்கமற்ற
புல்வெளியின் சமையலறை
என்னை
உறைய வைக்கும் மணியோசைகளின் குளிர்மை கிளர்ச்சியூட்டுகிறது,
பெருங்குழப்பத்துடன்,
சிறு எல்லைக்கு இது சற்று அதிகம்
வேட்டைக்காரன்
எனது தலையைத் தன் பக்கம் உயர்த்தி,
அவர்களின்
வெற்றிடங்களை என் கண்களிலிருந்து பிடுங்கினான், மறந்து வைத்துவிடுங்கள் அவர்களை அவன்
சட்டைப் பைகளில்
விமான
நிலையப் பாதுகாவலர்
அவன்
மறைத்து வைத்துள்ளதை வெறுமையாக்கக் கோரும்வரை,
அவன்
மறதியை வெளியே இழுங்கள் முழுச்
சோதனைக்காக,
இந்தக் கொடிய-சுவலை அல்ல
விலங்குத்
தீ தடாலென அடைக்கும் ஒரு கதவின்
வரைவில்
கொழுந்து விட்டெரிந்தது, ஒரு முடிவின் ஊடுருவல்
அதன்
பேரச்சத்தைச் சீழ்க்கையடிக்கிறது எனது விலா எலும்பிலும்
சிறுநீரகங்களிலும்
இரத்தம் உறையும் வரை
அந்தப்
பேய் இதயத்தினுள் இறங்கி
அதன்
தோற்றத்தைப் பக்குவப்படுத்திய பின்னர்
வெளியேறியது
பிற பேய்கள் சறுக்கும் இடத்திற்கு
மரங்களிலிருந்தும்
சறுக்கியது
தேநீர்
கோப்பைகள் யுத்தத்தின் அடித்தளத்தில் உடைந்தன,
ரொட்டி
சுடுபவனின் ஒரு கை மகன் வீடு திரும்பும்
பாதிவழியில்
ஒரு வெள்ளைப்புலியின் வாயில் அகப்பட்டுக் கொண்டான்
நிலா,
ஒரு சரக்கு வாகனத்தின் பின்புறத்தில் சமநிலைக்கு யத்தனிக்கிறது
அது
குறியிட்டுப் பாடுகிறது அதன் துருவேறிய ராகத்தை,
நான்
உறங்கினேன், அடிப்படை உறக்கத்தை நான் உறங்கினேன்.
இங்கே,
இங்கே எனது பேய்கள். இப்போது என்னை
உறங்க
விடுங்கள், என்னை உறங்க விடுங்கள். கடவுளே, இதுவல்ல, இதுவல்ல, ஆனால், கடவுளே, மற்ற
அதிசயக் கருவி போல என்னை இருக்க விடுங்கள்,
இரவின்
சிறுத்தைப்புலி அதன் கடவுள் தந்த பொன் மென்மயிராடையை
மறுதலித்தது,
உயர வளர்ந்த புல்லில் அதன் இருப்பிடங்களின்
அமைதியைத்
தழுவியது, வேட்டைக்காரன்
அறியவில்லை
அவன் இறந்த விலங்கின் தலையைத் தன் மார்பு நோக்கி
உயர்த்திய
பொழுது, புகைப்படக் கருவி
நான்,
கடவுளே, நான் கொண்டு வந்திருந்தேன் எனது வாய்
திறந்தது,
எனது வாய், கடவுளே, நச்சுப் பல்லால் தீண்டி
எனது
பசி அவன் மீது கவியும் இடங்களை எல்லாம் கிழித்தது.
கடவுளே,
அவனுக்கு மேலே உயரும் பொன்நிறச் சொர்க்கமாக
என்னை
இருக்க விடுங்கள், தடாலென அடிக்கும் ஒரு கதவின் அமைதி.
தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
ரோஜர் ரீவ்ஸ் King Me நூலின் ஆசிரியர். 2013 NEA Fellowship மற்றும் 2008-ல் Ruth
Lilly Fellowship விருதுகளும் Poetry Foundation-ஆல் அவருக்கு வழங்கப்பட்டது. University
of Texas-Austin-ல் முனைவர் பட்டம் பெற்றவர். தற்பொழுது சிகாகோ இல்லியானஸ் பல்கலைக்
கழகத்தில் கவிதைத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
No comments:
Post a Comment