புலம்பல் I
நேர வலிகள், /
காட்சிப் பரப்புகளின் காயங்கள், ஒளிக் கீறல்கள் — அதற்கான வாய்ப்புண்டு / அனைத்தும்,
அழகி.
ஊர்சுலா ஸ்டார்க்கி
வறண்ட
படுக்கையில் வசீகரக் கால். நேர வலிகள்,
காட்சிப்
பரப்புகளின் காயங்கள், ஒளிக் கீறல்கள் — அதற்கான வாய்ப்புண்டு
அனைத்தும்,
அழகி. என் வலுவிழந்த பல் ஆப்பிளைக் கடித்தது. வெறுப்பு
விஷம்
போல் சுவைப்பதை நிறுத்திக் கொண்டது. சில வேளைகளில்
எனது
தோழர்களின் போதை இயல்புகளை அது திரித்துக் கூறுகிறது, மீண்டும்
அந்த
வண்ணம் புதிது, மெழுகு புதிது, பூண்டு பழுத்தது. ஒவ்வொரு
வசந்த
காலத்திலும் அழுகிய இடுகாட்டு மண்திட்டில்
புதிய
புல் முளைக்கிறது. இங்கு எனது படுக்கையில் அந்தச் சுழற்சி
என்னைத்
துயரத்தில் ஆழ்த்துகிறது, ஆனால் இது
நான்
அச்சம் கொள்ளும் அருவமானவை அல்ல.
தனித்து
விடப்பட்ட நிலையத்திற்கு
ஒவ்வொரு
காலை வேளையிலும் எனது கனவுகள் மற்றும் நாணயங்கள்
அடங்கிய
மூட்டைகளைச் சுமந்து செல்லும் பொழுது
கடந்து
செல்லும் நாய்க் கூட்டம் அது, இரவின் பட்டு மிச்சங்கள்
ரோஜா
மற்றும் வாகைச் செடியின் வாசனையை இழந்தது. நான்
காத்திருக்கிறேன்
ஆப்பிள் துண்டுகளை என் பற்களில் கடித்தவாறும்,
என்
கவித்துவப் புனித நாட்களின் பலவீனமான நேர்த்தியுடனும்.
ஸ்பானிய
மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: ஜோனதான் சிம்கின்ஸ்
ஊர்சுலா ஸ்டார்க்கி (சிலி, 1983) எழுத்தாளர். கலை
வரலாறு, வாசிப்பு மேம்பாடு மற்றும் கலாச்சார மேலாண்மை பயின்றவர். வின்செண்ட்டி ஹுயுட்டோப்ரோ
எழுதிய Creationism (The Lune, forthcoming 2018) நூலை ஜோனதான் சிம்கின்ஸுடன் இணைந்து மொழிபெயர்த்தவர்.
நான்கு கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்: Obertura (Maipo Ediciones, 2000),
Ático (Editorial Cuarto Propio, 2007), Artificio (Ediciones
Colectivas Periféricas, 2013), மற்றும் Prótesis (Bokeh, 2016).
No comments:
Post a Comment