Saturday, September 1, 2018


கிம் க்யூங் ஜு

கவிதைகள்


கொரிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: ஜேக் லெவின்
தமிழில்: மோகன ரவிச்சந்திரன்


ஒரு பறவைக் கூட்டத்தை விரட்டுதல்

குளிர்ந்த நீரில் தொடைகளைக் கழுவும் ஒலி போல, ஒரு பறவைக் கூட்டம்
உயர எழுந்து பறக்கிறது.

பறவைக் கூட்டத்தின் தொடைகளில் ஒரு மலை தொங்குகிறது. 
காட்டு ரோஜாக்கள் பறவைக் கூட்டத்தின் தொடைகளில் பூக்கின்றன.

அந்தப் பறவைகள் எனது உடலைக் கடந்து செல்லும் வரை

மாம்ச வாசனை மேகங்களிலிருந்து ஊற்றெடுக்கும்.          
இருந்தாலும் இது கடந்து செல்லும் பறவைகளின் செயல்.

மேகங்கள் கீழே விழுந்து மிதந்தபடி பள்ளத்தாக்கு நீரைச் சுவைக்கின்றன.
 
கீழிறங்கிய பறவைக் கூட்டத்தை நான் விரட்டுகிறேன்.








முட்டாள்

அலைகின்ற ஒரு நாய் ஒரு முட்டாளாக இருக்கும் பொழுது
அது நடனமாடுகிறது.

கடலின் மேற்பரப்பில்
ஒரு வெறுமையான தொலைபேசியகம்
மிதக்கிறது.

ஒரு குன்றில் மிதந்தபடி
மலையேறுபவர்
தமது மார்பின் மீதுள்ள ஒரு வரைபடத்தைத் திறக்கிறார்.
அருவித் தடத்தில் தடுமாறி, தூக்கி வீசப்பட்டு
எதிர்த்து நிற்கிறார்

உயரப் பறக்கும் பள்ளத்தாக்குகள்

கற்களின் முகங்களில் பொங்குகின்றன.
மெல்லிய அமைதியுடன்,
ஒரு பென்சில் கூர் தீட்டப்படுகிறது.
அழிப்பான் மழிக்கப்படுகிறது.

சூரிய ஒளி எழுந்து, பாதி-உறக்கத்துடன்,
உங்கள் கால்களின் கீழ் உறங்குகிறது.

மை கொண்டு வண்ணம் தீட்டப்பட்ட, வெண்மைநிற
பலத்த மழை.





கிம் க்யூங் ஜு (கவிஞர்)

முக்கியமான தென் கொரியா இளைய எழுத்தாளர்களில் ஒருவர். 2016-ல் பிளேக் ஓஸன் வெளியிட்ட  I Am a Season that Does Not Exist in the World உட்பட கவிதை, கட்டுரை மற்றும் நாடகக் கோட்பாடு குறித்து 10 நூல்கள் எழுதியுள்ளார். Kim Soo Young Prize உட்பட கொரியாவில் மதிப்பு வாய்ந்த இலக்கிய விருதுகளில் சிலவற்றைப் பெற்றவர். கவிஞராவதற்கு முன் ஒரு விளம்பர எழுத்தாளராக, கோஸ்ட் எழுத்தாளராக இருந்தார். பாலுணர்வு நாவல்களையும் எழுதியுள்ளார். தற்பொழுது அவர் கொரிய ராப் பாடகருடன் இணைந்து Poetic Justice எனும் கவிதை / ஹிப்-ஹாப் நிகழ்வில் பணியாற்றுகிறார். வரும் கோடையில் அவருடைய சிறு கவிதை நூலை clinic  வெளியிடுகிறது.

ஜேக் லெவின் (மொழிபெயர்ப்பாளர்)
கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். ஃபுல்பிரைட் புலஉதவி, KGSP புல உதவி மற்றும் Literature Translation Institute of Korea-வின் பல உதவிகள் உட்பட பல விருதுகளும் உதவிகளும் பெற்றுள்ளார். Guernica, Boston Review, The New York Times and Gulf Coast போன்ற முக்கியமான பத்திரிகைகளில் அவருடைய படைப்புகள் வெளி வந்துள்ளன. இவருடைய மொழிபெயர்ப்பில் வெளியான கிம் க்யூங் ஜுவின் முதல் கவிதைத் தொகுதி ALTA’s Lucien Stryk Prize இறுதிப் போட்டிப் பட்டியலில் உள்ளது. Keimyung University படைப்பிலக்கியத் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் Spork Press ஆசிரியர்

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...