படகுகளை
வாழ்த்துதல்
லூசிலி
கிளிஃப்டன்
நமது
புரிதலின் விளிம்பில்
இப்போது
கூட நுழைந்து கொண்டிருக்கும்
இந்த
அலை
அச்சம்
தோய்ந்த முகத்துக்கு அப்பால்
உங்களைச்
சுமந்து செல்லட்டும்
நீங்கள்
காற்றை முத்தமிட்டு
பின்னர்
அதிலிருந்து திரும்புவீர்களாக
நிச்சயமாக
அது உங்கள் ஆதரவை நேசிக்கும்
உங்கள்
கண்கள் நீரை நோக்கித் திறக்கட்டும்
எப்பொழுதும்
அலையடிக்கும் நீர்
நீங்கள்
உங்கள் அறியாமையில் பயணிப்பீர்களாக
இதிலிருந்து
அது வரை.
தமிழில்:
மோகன ரவிச்சந்திரன்
No comments:
Post a Comment