இரண்டு கவிதைகள்
பாட்ரிக் ஜேம்ஸ் எர்ரிங்டன்
கற்பனைப்
பரப்பு
நான்
வழிபடுகிறேன், எனது கடவுளாக இரு.
–The Tempest (II,ii)
எனது
அனைத்துப் பிரயத்தனங்களுக்கும் மாறாக, நீண்ட காலமாக எந்தக் கடவுளும் இல்லை எனக்காக.
வீட்டிற்குச் செல்லும் பொழுது ஒரு குழந்தையைப் போல, பின்னிருக்கையில் சற்றும் அனுபவித்தல்
இல்லாமல், ஒரு வேளை
அவளுடைய
முதல் திரைப்படத்தைக் கண்ட பிறகு, அவளுடைய இயல்பான கற்பனைத் தன்மையுடனான பயணம் முடிவில்லாமல்
போயிருக்கலாம். நான் அந்தக் குழந்தையை ஒருபோதும் பெற முடியாது, ஆனால் அவளைக் கற்பனை
செய்து பார்க்க முடியும் மேலும்
மாபெரும்
பாசாங்குத்தனம் கொண்ட கற்பனையாளருக்காக நான் ஏன் இன்னமும் எனக்குள் வழிபடுதலில் அகப்பட்டிருக்கிறேன்
எனச் சிந்திக்க விரும்புகிறேன், எனக்கு ஒன்றின் மீது மிகச் சரியாக நம்பிக்கை இல்லாத
போதிலும். கற்பனை செய்யுங்கள்
அந்த
முதல் உயிரினம் எவ்வாறு முற்றிலும் தனிமையானதாக
(சில
காரணங்களுக்காக, ஒரு வெண்மை வால் மான் காலை ஒளியில்,
துடிப்புடன்
நிற்பதை நான் காட்சிப் படுத்துகிறேன்)
நிகழ்வுகளின்-கற்பனை
வனத்தில் மட்டும் உணர்ந்திருக்க
முடியும்.
ஒரு புத்தகத்தை வாசித்தல் போல அது, எவ்வித எச்சரிக்கையும்
இல்லாமல்,
உங்களைப் பெயரிட்டுக் குறிப்பிடுகிறது. நினைத்துப் பார்க்கிறேன்
ஒரு
படுக்கையறையில் தனிமையில் அமர்ந்திருக்கும் கடவுள் பற்றி, சுற்றிலும்
சிதறிக்
கிடக்கும் அதன் பொம்மைகளுடன், தோரணைமிக்க, செயலற்ற
செயல்
மனிதர்களின் ஒரு முழுச் சுவர்க்கம் (உண்மையில், மின்கல அடுக்கு எதுவுமில்லை).
சற்று
சிந்தியுங்கள் கண்டறியப்பட்ட உங்களைக் கண்டடைந்த
ஆச்சரியத்தை,
அழைக்கப்பட்டீர்கள்-முதலில் ஒருவரால், பிறகு மற்றொருவரால்,
அதன்
பின் முடிவின்றி, சில
காரணங்களுக்காக,
அந்தக் குழந்தையை மீண்டும் நினைக்கிறேன், உறங்குகிறது இப்போது, இருண்ட மைல்கள் முகப்பு
விளக்குகளுக்கு அப்பால் வனத்தினுள்
சறுக்குவது
போல. அவள் சற்று அமைதியற்றுத் திரிகிறாள், காபி போல
ஒரு
கோப்பையில், ஒரு கனவு எப்படியாவது அமைதியின்றி
நிகழ்வுகளின்
நிதர்சனத்தில், அந்த இருக்கை, அந்தப் பனி-
மினுக்கும்
மரத்துண்டுகள், அந்தத் தெளிவான வாழ்க்கை, அந்த இருள்.
• • •
அது அவசியமானதாக
மாற வேண்டும் என்றால் திரட்டப்பட வேண்டும்
குளிர்காலம்
மீண்டும், ஆரம்ப நாட்களாக இருந்தாலும், அந்த வானமும் நானும்
அதன்
சுய ஒழுங்கை உணர முடிகிறது. பழைய தொகுப்பாளர் பணியிலிருந்து விலகுகிறார், நிற்கிறார்
வளைவில்
உள்ள அங்காடியில் ரொட்டி, ஒயின்,
தேவையானதெல்லாம்
பெற. பால், ஒரு வேளை-சென்றடைதல் அந்த ஒன்றிற்காக அவசியமில்லை எப்பொழுதும்
திரும்பவும்,
ஒவ்வொன்றையும் இன்றிரவு குடித்தாக வேண்டும்-கடைசி
இலையுதிர்காலச்
செடிகள் சாளரத்தின் வழியாக ஒரு வாளியில். பெறுங்கள்
தரப்பட்டுள்ளவற்றை
மட்டும். நான் உங்களை மேலும் அதிகமாக நேசித்திருக்கலாம்,
என
நினைக்கிறேன். அனைத்து மாலைப் பொழுதுகளும், நான் உங்களைக் கைப்பற்ற முடிகிற அளவுக்கு
உங்களைக் கைப்பற்றுகிறேன்
ஒன்றிணைந்து,
சொற்றொடரியல் போல. உங்கள் முடி இலகுவாகக் காற்றில் படர்கிறது. கடந்து போனது திறந்திருந்த
உணவகச் சமையலறை, அந்தி ஒளி மென்மையாகச் செல்கிறது மர வேலைப்பாடுகளில்
அலையும்
எலியின் அனைத்து அரித்தல்களுடன், உதிர்ந்த முட்செடி விதை புல்வெளியில் துளிர் விடுகிறது.
ஒரு பறவைவீடு வெறுமையானது அதற்கும் மேலே. இழந்தாலும்கூட,
காலம்
நம்மை
இழக்காதிருக்கிறது, வருடங்கள், நினைவூட்டல்கள் போல, மீதங்கள் சில
நன்கு-திட்டமிடப்பட்ட
விடுமுறை நாட்களிலிருந்து திரும்ப மீள்கின்றன. வரலாற்று நிலப்பரப்பாக இருக்கலாம். ஒவ்வொன்றுக்கும்
ஒரு எல்லை உண்டு,
நீங்கள்
கூறுவதுண்டு, நகர விளக்குகளின் வெளிச்சம் தொலைதூரத்தைத் தவறவிடுகிறது திரண்ட இருளுக்கு
எதிராக. அறிவு பற்றி சிந்திக்கிறேன், இப்போது, அவ்வளவு அதிகமாக அல்ல
தெரிந்த
வரை அல்லது உணர்ந்த வரை அல்லது வருந்திய வரை. நான் உங்களை நேசித்திருக்கலாம் அனைத்து
மணித்துளிகளிலும், நம்மை அவர்களிடமிருந்து இலகுவாகச் சறுக்க விட்டது போதும்
எண்ணிக்கையிடல்
போல, அவசியமானது போல, இந்தக் கவிதை இங்கு முற்றுப் பெற வேண்டும். ஆனால், நகரத்தின்
ஒரே தொகுப்பாளர் இன்றிரவுக்கு முன்னரே சறுக்கி விழுந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது
செடிகள்
வாங்கும் பொழுது, ஒரு வேளை அவருக்குத் தெரிந்திருக்கலாம் அந்த முடிவின் மீது உறைந்து
விடுவதில் உண்மையில் பயனில்லை என. அல்லது ஒரு வேளை யாராவது காத்திருக்கக்கூடும்
திரும்பவும்
வீட்டில், மிக நீண்ட நேரமாக, நான் ஒன்று திரட்டுகிறேன், அவளுக்காக நேர்த்தியான சிலவற்றை
அவன் செய்திருப்பதால், சிறியதான மற்றும் அவசியமானதைக் காட்டிலும் அதிகமான சிலவற்றை.
• • •
தமிழில்:
மோகன ரவிச்சந்திரன்
பாட்ரிக் ஜேம்ஸ் எர்ரிங்டன் கனடா, அல்பெர்ட்டா பிரைரீஸைச் சேர்ந்த ஒரு கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
London Magazine கவிதை விருது 2016-ன் வெற்றியாளர். அவருடைய கவிதைகள்
Best New Poets 2016, The Iowa Review, American Literary Review, West Branch, Cider Press Review, Copper Nickel, Diagram, The Adroit Journal
மற்றும் Horsethief
உட்பட பல பத்திரிகைகளிலும் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. கொலம்பியா பல்கலைக் கழகத்தின்
MFA programme பட்டதாரியான பாட்ரிக், தற்பொழுது எடின்பர்க்கில் வசிக்கிறார்.
அங்கு அவர் புனித ஆண்ட்ரியஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார்.
No comments:
Post a Comment