தத்துவவாதிகளின் தப்பெண்ணங்கள் குறித்து...
நீட்ஷே
மெய்மையின் மீதான சக்தி பல துணிகர செயல்களின் மீதான சக்தியாய்
இன்னமும் நம்மைத் தூண்டுகிறது. அதன் புகழ் வாய்ந்த நேர்மையை இதுவரை அனைத்து
தத்துவவாதிகளும் மரியாதையுடன் பேசி வந்துள்ளார்கள். நம்முன் கிடத்தப்பட்டுள்ள இந்த
மெய்மையின் மீதான சக்தி என்ன விதமான கேள்விகளை எழுப்புகிறது? விசித்திரமான,
வஞ்சகமான கேள்விக்கு உட்படுத்த வேண்டிய கேள்விகள்! இன்னமும் அது ஒரு அரிதான
தொடக்கமாய்த் தோன்றுகிறது. இப்போது கூட அது ஒரு நீண்ட கதை. இறுதியாக ஐயத்திற்கு
இடம் அளிப்பது, பொறுமை இழப்பது மற்றும் பதற்றத்துடன் திரும்புதல் என்பது நமக்கு
வியப்பானதா? கேள்விகளைக் கேட்பதற்கு கூட இந்த ஸ்பிங்ஸிடமிருந்து கற்றுக் கொள்ள
வேண்டியிருப்பது வியப்பானதா? உண்மையில் இங்கு நம்முன் கேள்விகளைத் தொடுப்பது யார்?
உண்மையில் நம்முள் “மெய்மையை” யாசிப்பது எது?
உண்மையில் இந்த சக்தியின் ஆதாரம் குறித்து
கேள்விகளின் நெடுங்காலத் தேக்கத்தை அடைந்துள்ளோம் – அதீதமான அடிப்படைக் கேள்வி
முன் இறுதியாக ஒரு முழுமையான நிறுத்தத்தை அடையும் வரை இந்த சக்தியின் மதிப்பு
குறித்து நாம் வினவுகிறோம். நாம் மெய்மையை யாசிக்கிறோம் எனக் கொள்வோம். மெய்மை
அற்றதை, மேலும் நிச்சயமற்றதை, அறியாமையை ஏன் நாம் நாடுவதில்லை?
மெய்மையின் மதிப்பு குறித்த சிக்கல் நம்முன்
தோன்றுகிறது அல்லது அந்த சிக்கல் முன் நாம் தோன்றுகிறோம். நம்மில் யார் இங்கு
பதில் அளிக்கும் ஈடிபஸ்? யார் கேள்வி எழுப்பும் ஸ்பிங்ஸ்? அது கேள்விகளின் அல்லது
ஐயக் கேள்விகளின் சந்திப்பு என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment