Thursday, February 26, 2015

நீட்ஷே 3-4

தத்துவவாதிகளின் தப்பெண்ணங்கள் குறித்து...
நீட்ஷே
3
தத்துவவாதிகளின் விரல் ரேகைகளைப் போதுமான அளவு உற்று நோக்கிய பின் நான் எனக்குள் சொல்லிக் கொள்வதுண்டு: மாபெரும் பிரக்ஞைபூர்வமான சிந்தனைகளை உள்ளுணர்வுச் செயல்பாடுகளுக்குள் இன்னமும் உட்படுத்த வேண்டும். அவை தத்துவார்த்த சிந்தனைப் போக்கை நோக்கியும் செல்கின்றன. பாரம்பர்ய பண்புகள் குறித்தும் “உள்ளார்ந்ததுஎது என்பது குறித்தும் திரும்பக் கற்க வேண்டியுள்ளதைப் போல நாம் இங்கு திரும்பவும் கற்க வேண்டியுள்ளது. முழுமையான செயல்முறைகளிலும் மரபார்த்த போக்குகளிலும் பிறப்பின் செயல் ஆழ்ந்த பரிசீலனைக்குத் தகுதிப்பாடு அற்றதைப் போல, “பிரக்ஞைபூர்வமான இருத்தல்உள்ளுணர்வுத் தூண்டுதல்களாக உள்ள எதிர்நிலையில் எந்த முடிவான அர்த்தத்திலும் இல்லை. ஒரு தத்துவவாதியின் பெரும்பாலான பிரக்ஞைபூர்வ சிந்தனை ரகசியமாக வழி நடத்தப்படுகிறது. மேலும் அவர்களுடைய உள்ளுணர்வுகளால் சில வகை வழிமுறைகளில் செலுத்தப்படுகிறது.


அனைத்து தர்க்கங்களுக்குப் பின்னாலும் இயக்கத்தின் தலைமை நிலை போலத் தோற்றம் தரும் பின்புலத்திலும் கூட மதிப்பீடுகள் நிலை பெறுகின்றன. அல்லது மேலும் தெளிவாகச் சொல்வதென்றால், உடல் இயங்கியல் தேவைகள் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட வகையான பதப்படுத்தலுக்காக நிலை கொள்கின்றன. உதாரணமாக, நுட்பமற்ற நிலையை விட உறுதியானது என்பது மதிப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும். மேலும், “மெய்மையைவிட புறத்தோற்றம் மதிப்பில் தாழ்ந்ததாக இருக்க வேண்டும். சில கணிப்புகள் நமக்கான ஒழுங்குபடுத்தலின் முக்கியத்துவத்திற்கு பதிலாக மேம்போக்கான கணிப்புகளாக மட்டுமே, நம்மைப் போன்ற சில இருத்தல்களின் பாதுகாப்பிற்கு அவசியப்படுகிற ஒரு குறிப்பிட்ட வகை முட்டாள்தனமாக மட்டுமே இருக்கின்றன. அப்படியெனில், மனிதன் என்பவன் “பொருள்களின் அளவீடுமட்டும் அல்ல-

4
ஒரு தீர்ப்பின் பொய்மை நமக்கு ஒரு தீர்ப்பிற்கான மறுதலிப்பாக இருக்கத் தேவையில்லை. இவ்வகையில் நமது புதிய மொழி விசித்திரமாக ஒலிக்கிறது. கேள்வி என்னவெனில், வாழ்வின் மேம்பாடு, வாழ்வின் பாதுகாப்பு, இனவகைப் பாதுகாப்பு, குறிப்பாக இனவகை பண்படுத்தல் எதுவரை என்பதே. தவறான தீர்ப்புகள் (செயற்கையான தீர்ப்புகளும்) நமக்கு இன்றியமையாது உள்ளதாக உரிமை கோரும் அடிப்படையைச் சார்ந்துள்ளோம். தர்க்கத்தின் கட்டுக் கதையை ஏற்றுக் கொள்ளாமலும் நிபந்தனையற்றதும் சுய அடையாளத்தினுடையதுமான தெளிவாகக் கண்டடைந்த உலகத்திற்கு எதிரான உண்மையை அளவிடாமலும் எண்ணிக்கை அளவில் உலகத்தின் நிலையான பிழை இல்லாமலும் மனிதனால் வாழ முடியாது. அதாவது தவறான தீர்ப்புகளைக் கைவிடுதல் என்பது வாழ்வைக் கைவிடுதல் ஆகும். மேலும் வாழ்வை மறுதலித்தலும் ஆகும். வாழ்வின் நிலைப்பாடு போல, பொய்மையை அடையாளம் காண்பது நிச்சயமாக பழக்கப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு உணர்வுகளை ஆபத்தான வழிகளில் எதிர்த்து நிற்பதாகும். ஒரு தத்துவம் நல்லதுக்கும் தீயதுகளுக்கும் அப்பாலான அடையாளத்திற்காக மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...