உள்ளீடு
ஒரு பனைநுங்கினுள்
பத்திரமாய் உறங்குகிறது
பல வருடங்களாய்ப் பெய்த மழை.
துணிச்சல்
மழையின் வருகையை அறிவித்தபடி
பறந்து செல்லும் பட்டாம்பூச்சிக்குச்
சிறகு நனைந்து விடுமென்ற
பயமில்லை.
காலாதீதம்
ஈரமனதை வேர்களில் பூசி
ஆசை ஆசையாய் பூஞ்செடி நடுகிறது
வரும் மழைக்காலத்தில்
அச்செடியில் பூக்கப் போகும்
ஒரு மஞ்சள் நிறப் பூ.
மோகன ரவிச்சந்திரன்
No comments:
Post a Comment