நெருப்பில்
எரிந்து கொண்டிருக்கும் எலும்பிலிருந்து
கசிகிறது
உயிர்ச்சாறு
புறங்கையில்
துளிகளாய்ச் சிந்துகிறது
வெக்கை
மனசு
தீச்சொல்
தீண்டிய ஜ்வாலையில்
பொருள்
சுவை இழக்கிறது
எப்பொழுதும்
கோடையாக இருக்கும்
அகவெளியில்
வெறுப்பு
மட்டும் எவ்வாறு பூத்தது?
No comments:
Post a Comment