Saturday, April 26, 2014

சரண் மோகன ரவிச்சந்திரன்

சரண்

காட்சிகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு
உன்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கத் தவிக்கின்றன விழிகள்.
நீல நிறக் கேன்வாஸில் விளையாடும் என் தூரிகை
மேக உணர்வின் ஊஞ்சலாய்
ஒப்பனைகளற்ற நித்தியத்துவமுமற்ற
தேகத்தின் விழுதுகளில் அலைகிறது.
காற்றில் அலையும் காலாதீதக் குயிலின் குரல்
வரைதலை உணர்ந்து திகைக்கிறது.
துண்டுகளாய் உருவ உயிரை உடைக்கும் மின்சார வளைவுகள்
அறிவார்த்த கர்வத்தை உடைத்து நொறுக்குதல்
வண்ணக் கோடுகளின் நடைமௌனத்தில் நிகழ்ந்தேறியது.
நான் நீ என் உன் அற்ற
பிரதிமைகளைச் சூல் கொண்ட
உன்னதங்களின் பிறப்பு வெளியில்
வயதுகளைச் சிதைத்து முகம் காட்டும்
முழு வனப்பையும் பருக வேண்டும்.
உன் ஆலிங்கனச் சிறகுகளில் பறக்க வேண்டும்.
விடைபெறுதல் அற்ற சரணாகதி வேண்டும்.
கேள்விகளற்ற இரவு பகல்கள் அற்ற
உன் பூரண உடம்பின்
நித்தியத்துவத்தில் புதைய வேண்டும்.
வளர்வதும் தேய்வதும் படிமத்தை உயிர்ப்பிக்கத்தான்.
மெய்மைநிலை அலாதியானது காற்று போல.
பருகுதல் நிலைபேறுடையதாகிறது

உன் முழுமை போல.

மோகன ரவிச்சந்திரன்

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...