கவிஞனின் தொழில்
அமி லோவல்
ஒரு நாற்காலியை எப்படி உருவாக்குவது என
முதலில் தெரிந்து கொள்ளாமல் ஒரு மனிதனால் நாற்காலியை உருவாக்க முடியும் என யாரும் எதிர்பார்க்க
முடியாது, ஆனால் ஒரு கவிஞன் உருவாக்கப்படுவதில்லை, அவன் பிறக்கிறான், அவனுடைய கவிதைகள்
தாமாகவே அவனது நிரம்பி வழியும் இதயத்திலிருந்து வெடித்துக் கிளம்புகிறது என ஒரு பிரபலமான
கருத்து நிலவுகிறது. உண்மையாகவே கவிஞன் அவனுடைய தொழிலை ஒரு அமைச்சரவையை உருவாக்குதல்
போல, அதே பாணியில், அதே கடும் பிரயத்தனங்களுடன் கூடிய அக்கறையுடன் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவனுடைய இதயம் உயர்ந்த சிந்தனைகளாலும் தீப்பொறி என மின்னும் கற்பனைகளாலும் பிரவகிக்கலாம்,
ஆனால் எழுதப்படுகிற வார்த்தைகள் மூலம் வாசிப்பவர்களுக்கு அவற்றை எடுத்துச் செல்ல முடியாமல்
போனால், அவன் ஒரு கவிஞன் என உரிமை கோர வாய்ப்பில்லை. ஆகவே, ஒரு கைவினைஞர் தமது தொழில்
நுட்பம் குறித்து விளக்கவும் விவரிக்கவும் ஒரு சில தருணங்களைச் செலவிட்டதற்காக மன்னிக்கப்படலாம்.
உள்ளார்ந்த ஆய்வாக நிலைநிறுத்த முடியாத அழகின் படைப்பு குறைபாடு உடையதாகும், மலிவான
கூறுகளால் மிக மோசமாக வடிவமைக்கப்பட்டதாகும்.
முதலில், நான் எனது உறுதியான நம்பிக்கையைக்
குறிப்பிட விரும்புகிறேன், கவிதை கற்பிக்க யத்தனிக்கக் கூடாது, அது வெகு எளிதாகத் தோன்ற
வேண்டும், ஏனென்றால் அது ஒரு படைக்கப்பட்ட அழகு, சில சமயங்களில் அந்த அழகு திகிலூட்டும்
விகாரத்தின் அழகாகக் கூட இருக்கலாம். ஒழுக்கவியல் குறித்த போதனைகளைக் கற்பிக்கச் சொல்லி
மரங்களிடம் நாம் கேட்கவில்லை. வீடு பேற்றைப் போதிப்பவர் மட்டுமே அவற்றின் மீது பிரதிகளைப்
பிணைப்பது அவசியம் என நினைக்கிறார். இந்தப் பிரதிகள் முட்டாள்தனமானவை என்பது நமக்குத்
தெரியும். கலை, ஓவியம், சிற்பம் அல்லது கவிதைகளின் படைப்புகளில் ஒரு கருத்து மாறுபாடற்ற
ஒழுக்கவியல் குறித்து எழுதுவது என்பது முட்டாள்தனமானது மட்டுமல்ல, அது கோழைத்தனமானது,
இழிவானதும் கூட. நாம் ஒரு அழகின் மீது ஐயம் கொள்ளும் போது, நாம் அரைகுறையாகப் புரிந்துள்ளோம்,
நமது வீறாப்பான சிந்தனைகளுடன் அவசரப்படுகிறோம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். நாம்
“இப்பேரண்டத்தின் உண்மைகளை ஒப்புக் கொள்வதிலிருந்து” எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம்!
பெருநிலப் பகுதிகளையும் சமுத்திரங்களையும் தூக்கி எறியும் இந்தப் பேரண்டம் அவற்றை எவ்வித
விளக்கமும் இல்லாமல் விட்டு விடுகிறது. கலை என்பது இரவு பகல் சமமாக இருக்கும் வேளைகளில்
எழும் புயல் காற்றைப் போலவோ அல்லது புவிஈர்ப்பு விசைக் கோட்பாடு போலவோ இப்பேரண்டத்தின்
அதிகபட்சச் செயல்பாடு போன்றதுதான்; அது ஒரு சின்னஞ்சிறிய ஒப்பனை வேலைப்பாடு மட்டுமே,
அல்லது மிகப்பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று கருதுவதற்கு நாம் வற்புறுத்துகிறோம்,
இல்லாவிட்டால் அது அழகான உச்ச உணர்ச்சிகளைத் தொங்கவிடும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்!